சில நாட்களுக்கு முன்பு இந்தியன் ரிசர்வ் வங்கியானது சர்வதேச வங்கிகள் மற்றும் நகை கடன் நிறுவனங்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் தரப்பிலிருந்து இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்தியன் ரிசர்வ் வங்கிய இடம் இருந்து எந்தவித பதிலும் வெளிவரவில்லை.
நகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்கள் பலரும் சர்வதேச வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் பொதுமக்கள் நகை அடகு வைப்பதால் அங்கும் சில புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் விரிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் :-
✓ 2 லட்சம் ரூபாய்க்கு நகைகள் அடமானம் வைக்கப்பட்டு இருப்பின் ஆண்டுக்கு ஒரு முறை வட்டியை மட்டும் செலுத்தி விட்டு நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை கடன் பெற்று இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு மாதமும் அதற்கான வட்டியை கட்டாயமாக செலுத்தியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ அதிகப்படியான நகை கடனாக கூட்டுறவு வங்கிகளில் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வங்கிகளில் நகையை மீட்டு மறு அடகு வைப்பதற்கு முழு தொகை மற்றும் அதற்கான வட்டி தொகை இரண்டையும் செலுத்தி நகையை மீட்டு அதற்கான மறுநாள் மீண்டும் மறு அடக்கு வைக்க வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பினை வெளியிட்டது. இதனால் பயத்தில் நகை கடன் வைத்தவர்கள் தங்களுடைய நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வரக்கூடிய நிலையில் கூட்டுறவு வங்கியில் போடப்பட்ட புதிய விதிமுறைகள் நகை கடன் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.