பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!
கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் சுமார் 45 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்வுகளிலும் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இதனால் இத்தனை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது வருத்தத்துக்குரியது.இதனை அறிந்த பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆதலால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களை உடனடித் தேர்வில் பங்கேற்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர்.பொதுத் தேர்வு எழுதாத 11,12ஆம் வகுப்பு மாணவர்களை உடனடி தேர்வில் பங்கேற்க வேண்டும் என கல்வித் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.