ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த லக்னோ பெண்! வைரலாகும் வீடியோ!

0
233

லக்னோவில் ஒரு பெண் டாக்சி டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் தான் அங்கு பெரிய வைரலாகி வருகிறது. மேலும் லக்னோவில் உள்ள அவாத் சந்திப்பில் டாக்ஸி ஓட்டுநரை லக்னோ பெண் ஒருவர் அடித்ததால் அங்கு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வீடியோ வைரல் ஆன பிறகு, இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அந்த பெண் அந்த டிரைவரை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் அந்த டாக்சி டிரைவர் அந்தப் பெண்ணின் மீது எந்த ஒரு புகாரும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுடன் இரண்டு இளைஞர்களும் அந்த டாக்ஸியில் இருந்துள்ளனர். அப்பொழுது அந்த டாக்சி டிரைவர் உடன் அந்த இளைஞர்கள் சண்டையிட்டு உள்ளனர். அருகிலிருந்த போலீஸ்காரரிடம் அந்த டாக்சி டிரைவர் உதவி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்தப் பெண் டெம்போ டிரைவரை செருப்பால் அடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த பெண் அந்த ஆட்டோ டிரைவரிடம் தவறாக நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

https://twitter.com/Gyanmishra_/status/1429206326677180417?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1429206326677180417%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

இந்த சம்பவம் லக்னோவில் உள்ள விகாஸ் நகர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக அந்த பெண் அந்த டாக்சி டிரைவரை செருப்பால் அடித்தார் என்பதற்கான விவரங்கள் கிடைத்துள்ளது. அந்தப் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் டாக்சியில் பயணம் செய்து உள்ளனர். பணம் செலுத்துவது தொடர்பாக டிரைவருக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் குறைத்து பணத்தை கூற டாக்சி டிரைவர் முழு பணத்தை கேட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றி அந்தப் பெண் செருப்பால் அடிக்கும் அளவிற்கு வந்துள்ளது. அங்கு போலீசாரும் அருகில் இருந்து உள்ளார். இருந்தும் அந்தப் பெண் அந்த ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்ணிற்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை, என்ற போதிலும் அந்தப் பெண் இப்படி நடந்துகொள்வது மிகவும் தவறானது, என்று சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர். இரண்டு இளைஞர்கள் மற்றும் அந்தப் பெண்ணின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Previous article“Zoom Meet” உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் உடலுறவு கொண்ட வீடியோ வைரல்!
Next articleஅமெரிக்க ராணுவத்துக்கு சிக்கல்! தாலிபான்கள் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here