திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

0
99
Another shock to the screen! Director KV Anand dies of heart attack
Another shock to the screen! Director KV Anand dies of heart attack

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமே இன்றளவும் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக ஒளிப்பதிவாளர் ,மற்றும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.தற்போது கொரோனாவின் 2-வது அலையால் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,திரையுலகினர் என பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் இன்றி ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு நடந்துக்கொண்டிருக்கும் வேளையில்,கே.வி ஆனந்த்க்கு கொரோனா தொற்று உறுதியானது.அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதற்கடுத்து அவருக்கு தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.திடீரென்று இன்று காலை கே.வி ஆனந்த்-க்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதன்பின் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 3.00 மணியளவில் கே.வி ஆனந்த் காலமானார்.

இவர் முதலில் ஆரம்பக்கட்ட வாழ்க்கையை சாதாரண புகைப்பட கலைஞராக விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடங்கினார்.அதன்பின் நடிகர் மோகன்லால் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.அதன்பின் தமிழில் காதல் தேசம் என்னும் தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.இவரது அயராது உழைப்பு இவரை இயக்குனராக உருவாக்கியது.அதன்பின் அயன்.மாற்றான்,கோ,அநேகன் என பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கினார்.

இன்றளவும் இப்படங்கள் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் இவர் உயிரிழந்ததால் நல்ல கலைஞனை திரையுலகம் இழந்துவிட்டது என அனைவரும் கூறுகின்றனர்.இந்த கொரோனாவால் விவேக்கிற்கு அடுத்து மற்றொரு திரை ஆளுமையை இழந்தது தமிழகத் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பல நடிகர்,நடிகை மற்றும் இயக்குனர்கள் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.