ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவர்கள் மீதான அழுத்தங்கள் அதிகமாவதால் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதற்கு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.
இந்நிலையில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்ற சுபிக்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையிலேயே பரிசை பெற்ற சுபிக்ஷாவிற்கு ஆன்லைன் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கையை அடுத்த திருப்புவனம் செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகள் சுபிக்ஷா . சத்தியமூர்த்தி ஒரு ஆட்டோ டிரைவர். சுபிக்ஷா மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக நடைபெற்று வந்துள்ளன.
ஆன்லைன் பாடம் புரியாததால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார். இப்படியே தொடர்ந்தால் நாம் மதிப்பெண் எடுக்க முடியாது என்று மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட சுபிக்ஷா திங்கள்கிழமை இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை மாணவர்களை தான் பலி கொடுக்கப் போகிறது? இந்த ஆன்லைன் வகுப்புகள். இதற்கு அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது?. என ஆன்லைன் வகுப்புகளை கைவிடக்கோரி பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.