அதிர்ச்சித் தகவல்! கொரோனா தடுப்பூசி 2024-ஆம் ஆண்டு வரை கிடைக்கவாய்ப்பில்லை! உறுதிபடக் கூறும் ஆய்வாளர்கள்!

0
76

அதிர்ச்சித் தகவல்! கொரோனா தடுப்பூசி 2024-ஆம் ஆண்டு வரை கிடைக்கவாய்ப்பில்லை! உறுதிபடக் கூறும் ஆய்வாளர்கள்!

2024 ஆம் ஆண்டு இறுதிவரை கொரோனா தடுப்பு ஊசி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்கு,தயாராகாது என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சிரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

பல்வேறு உலக நாடுகள் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் சில நாடுகள் கொரோனா தடுப்பு ஊசி ஆராய்ச்சியில் இரண்டு கட்ட சோதனைகள் நடத்தி முடித்து,மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.இதனால் மக்கள் வருகின்ற 2021 ஆம் ஆண்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில்,சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாகியான ஆதார் பூனவல்லா சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

மருந்து நிறுவனங்கள் இன்னும் உற்பத்தி திறனை அதிகரிக்க வில்லை என்றும்,இதனால் குறைந்த நேரத்தில் அதிக டோஸ் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கப் பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.தோராயமாக நோயாளிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி தேவை என்று எடுத்துக்கொண்டால் உலகம் முழுவதும் 1,500 கோடி தடுப்பூசிகள் தயார் செய்ய வேண்டியதாக இருக்கும்.இந்த 1500 கோடி தடுப்பூசிகளை,ஒரு வருடத்தில் தயார் செய்வது என்பது சாத்தியமில்லை என்றும் இதனை தயார் செய்வதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.அவர் இவ்வாறு கூறுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், கொரானா தடுப்பூசியின் தேவை உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளதே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் கொரோனா தடுப்பு ஊசியை உருவாக்க,
அஸ்ட்ராஜெனெகா,மற்றும் நோவாக்ஸ் உள்ளிட்ட 5 சர்வதேச மருத்த நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து சுமார் 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

author avatar
Pavithra