மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Photo of author

By Parthipan K

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சபீனா. இவர் அந்த பகுதியில் உள்ள அல் அமீன் ட்ரீட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அந்த காலாண்டு தேர்வில் சபீனா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். இந்நிலையில் சபீனாவை அடிக்கடி டிவி பார்க்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் அவரை கண்டித்து திட்டியுள்ளனர்.

மேலும் பெற்றோர் திட்டியவுடன் சபீனா படிப்பு வரவில்லை எனவும் அதிக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் சபீனா எலி பேஸ்டை சாப்பிட்டு  தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை அடுத்து மாணவி சபீனாவிற்கு கடந்த ஒன்றாம் தேதி அதிக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் பயந்து அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அரசு மருத்துவமனையில் மாணவி சபீனா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் இறப்பு அப்ப பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.