Cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பெறுவாரா?? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல்.
இந்தியாவின் மிக முக்கியமான நட்சத்திர பவுலர்களில் ஒருவர்தான் முகமது ஷமி. இவர் கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பந்து வீசினார். அதற்குப் பின் காயம் காரணமாக ஏழு மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் மீண்டும் பயிற்சி ஈடுபட்டார். இந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாடுவோர் என எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த போட்டியில் விளையாடவில்லை.
இதற்கு முன் பயிற்சி மேற்கொண்ட போது மீண்டும் அவரின் காலில் வீக்கம் காரணமாக ஓய்வில் இருந்தார். அடுத்தபடியாக அவர் தற்போது நாளை தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அணியில் இடம்பெறவில்லை. தற்போது ஷமி பெங்கால் பணிக்காக பந்துவீசி வருகிறார்.
அவர் மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய அசுரத்தனமான ஃபார்மை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் பல கிரிக்கெட் வல்லுனர்களும் முன்னாள் இந்திய அணி வீரர்களும் முகமது ஷமியை இந்தியாவில் சேர்த்து ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ஷமி ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலர் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஓராண்டு காலமாக எந்த விதமான போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அதனால் இந்த நிலையில் நாம் அவருடைய உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஷமி விஷயத்தில் நாங்கள் பொறுமையாக முடிவெடுத்து வருகிறோம். தற்போது அவர் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார் அவரை நன்றாக நாங்கள் கவனித்து வருகிறோம். டெஸ்ட் தொழில் அவர் விளையாடுவார் என்பது எவ்வாறு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என்பதை குறித்து தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.