லஞ்ச ஒழிப்பு துறை, சட்ட விரோத போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க PC-1 பரபரப்பு விடியோ!!

0
84
Anti-corruption department, PC-1 campaign to take action against illegal police officers!!
Anti-corruption department, PC-1 campaign to take action against illegal police officers!!

தென்காசி: ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். அவர் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் சில போலீஸ் மூலம் நடக்கும் குட்ட சம்பவங்கள் கண்டித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல், கேரளா ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போலி மது பாட்டில்களில் மதுபானம் விற்பனை, மற்றும் ஸ்பாகளில் பாலியல் தொழில் நடப்பது போன்ற பல குற்ற சம்பவங்கள் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அதற்க்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை. அதனை அடுத்து தற்போது வீடியோ பதிவு மூலம் வெளியுட்டுள்ளார். அதில் நான் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்நாடு போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யபட்டனர். முதலில் நான் பணியாற்றிய சிவகிரி போலீஸ் நிலையத்தில் தான். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ரூ.22 லட்சம் லஞ்சம் வாங்கியது நான் ஆதரங்களுடன் தந்து மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். ஆனால் அதற்க்கு அவர் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் தன்னை பணியிடை மாற்றம் செய்தனர்.

அதனை அடுத்து தன்னை ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிகிறேன். மேலும் இந்த போலீஸ் நிலையத்தில் நடக்கும் அநிதிகளை நான் பலமுறை மேல் இடத்தில் கூறியும் எந்த பயனும் இல்லாமல் லஞ்ச ஒழிப்பு துறையுடன் கைகோர்த்து பல தவறுகளை செய்து வருகின்றது. இதனால், விருப்ப ஓய்வு பெறும் மன நிலையில் உள்ளேன்.

சிலர்  500, 1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் கடை நிலை ஊழியர்களை கைது செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சட்ட விரோத கும்பல்களுடன் கை கோர்த்து, கோடிகளை குவித்து வரும் போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியோவில் அவர் கூறினார்.

Previous articleசாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய பிளேயிங் லெவன்.. உள்ளே வரும் புது வீரர்கள்!! கோப்பை வெல்லுமா??
Next articleஅட பாவிங்களா இப்படியுமா?? மனைவியே இல்லை ஆனால் கணவன்.. போலி திருமண கும்பல் சிக்கியது??