எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!

0
156
Any caste can become a priest! Stalin as the face of Anna!
Any caste can become a priest! Stalin as the face of Anna!

எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.அந்தவகையில் முதலில் மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.அதனையடுத்து மக்களின் தேவைகளை கண்டறிந்து இன்றளவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதனையடுத்து நேற்று காகிதமில்ல பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.இந்த பட்ஜெட் தாக்குதலில் கூட கல்வித்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளனர்.

அத்தோடு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலப்பு திருமணத்தை வரவேற்குரியதாக பல்வேறு நலத்திட்டங்களை கூறினார்.அந்த நலத்திட்டங்களை கேட்டு உயர் சாதியினர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு நகை மற்றும் பணம் போன்ற சலுகைகளை கூறி இவர்களே அதனை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறினர்.அதனையடுத்து தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் பயிற்சி பெற்ற அர்ச்சகரர்க்களுக்கு ஆணை நியமனமும் அளித்தார்.இந்த திட்டமானது  கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் 1971 ஆம் ஆண்டு அவரால் உத்தரவிடப்பட்ட சட்டம்.அதனையடுத்த வந்த ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறையில் இல்லை.அந்தவகையில் 51 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தற்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அனைத்து கட்சியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடக்க விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.பயிற்சி பெற்ற 82 அர்ச்சகரர்களுக்கு பணி நியமனம் ஆணையை வழங்கினார்.

மேலும் 20 ஓதுவார்கள் மற்றும் 158 கோவில்களுக்கு பணியாளர்கள் ஆணை வழங்கப்பட்டது.மேலும் சிறப்புடைய சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் திருச்சி சமயபுரம் கோவில் போன்ற கோவில்களுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.அனைத்து சாதியினரும் அட்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் மூலம் ஸ்டாலின் அவர்கள் அண்ணாவாக திகழ்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Previous articleதமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யுமாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleபட்ஜெட் தாக்கல் எதிரொலி! அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை பெரும் மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!