கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

0
137
#image_title

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் தேடுதளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

உலகத்தில் கூகுள் தேடுபொறி போலவே நிறைய தேடுதளங்கள் இருக்கின்றது. மைக்ரோ சாப்ட் பிங்க், யாகு சர்ச், சர்ச் எக்ஸ், ஓபன் சர்ச், பாய்டு, ஆஸ்க்.காம் என பல வகையான தேடு பொறி தளங்கள் உள்ளது. எத்தனை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் ஏன் உலக அளவில் கூகுள் தேடுபொறி தளம் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களிலும் கூகுள் தேடுபொறி தளம் இருந்து வந்தது. இதற்காக கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனக்கு என்று தனியாக சொந்தமாக தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இதற்காக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜான் ஜியானன்ட்ரியா அவர்களை கூகுளின் தொழில்நுட்பங்களை கையகப்படுத்த பணியமர்த்தி உள்ளது. இந்நிலையில் ஜான் ஜியானன்ட்ரியா அவர்கள் ஐ.ஓ.எஸ், மேக் எஸ் தளங்களில் பெகாசஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஆப்பிள் தேடுதளத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தேடல் தொழில்நுட்பங்களில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது.

ஆப்பிள் தளங்களில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாயை செலவழித்துள்ளது. தற்பொழுது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சி கூகுளுக்கு கவலை அளிப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாற்றியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய தேடு பொறியை உருவாக்கினால் கூகுளுக்கு ஏற்படும் வருவாய் குறையும். இதனால் தான் அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும் புதிய திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும் தேடுபொறி தளத்தை உருவாக்க பயன்படும் ஒரு தேடு பொறி தொழில்நுட்பம் ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Previous articleவிராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!
Next article20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!!