விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

0
43
#image_title

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

விராட் கோஹ்லி அவர்களின் சாதனைகளை வருங்கால கிரிக்கெட் வீரர்கள் முறியடிப்பது என்பது மிக மிக கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதற்கு இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் காரணமாக இருந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி போன்றோர்களின் சீனியர் வீரர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதிலும் பேட்டிங், பீல்டிங் எனறு இரண்டிலுமே விராட் கோஹ்லி அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 49 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் படைத்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க விராட் கோஹ்லி அவர்களுக்கு இரண்டு சதங்கள் மட்டுமே தேவை. எனவே சச்சின் தெண்டுல்கர் அவர்களின் சாதனையை விராட் கோஹ்லி அவர்கள் முறியடித்துவிடுவார். இருப்பினும் விராட் கோஹ்லி அவர்களின் சாதனையை வருங்கால கிரிக்கெட் வீரர்கள் முறியடிப்பது மிகக் கடினம் என்று ஸ்ரீசாந்த் அவர்கள் கூறியுள்ளார்.

இது தெடர்பாக சமீபத்திய பேட்டியில் ஸ்ரீசாந்த் அவர்கள் “தற்பொழுது நாம் அனைவரும் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் கிரிக்கெட்டில் செய்த சாதனையை பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் தற்பொழுது சிறப்பாக விளையாடி வரும் விராட் கோஹ்லி அவர்கள் அதிக சதங்கள், அதிக அரை சதங்கள், உலகக் கோப்பை தொடர்பு அதிக ரன்கள் மேலும் பல சாதனைகளை முறியடிக்கப் போகிறார்.

இந்த சாதனைகளையும் வருங்காலத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் முறியடிக்கலாம். ஆனால் வருங்காலத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோஹ்லியின் சாதனைகளை முறியடிப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோஹ்லி அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றார். குறிப்பாக ரன்கள் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பீல்டிங்கிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றார். கிரிக்கெட் என்பது இந்தியாவை பொறுத்தவரை ஒரு மதம் ஆகும். அதுவே உலகத்தை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு உணர்வு” என்று அவர் கூறியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடர்பு விராட் கோஹ்லி 354 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் விராட் கோஹ்லி அவர்கள் ஒரு சதம், மூன்று அரைசதங்கள் அடித்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.