வாடிக்கையாளரின் உரையாடல்களை ஒட்டு கேட்ட ஆப்பிள் நிறுவனம்!! அபராதம் ரூ.814 கோடி!!

0
84
Apple eavesdropped on customer conversations!! Penalty Rs.814 Crore!!
Apple eavesdropped on customer conversations!! Penalty Rs.814 Crore!!

அமெரிக்கா: வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் உரையாடல்களை ஒட்டு கேட்ட வழக்கில் ஆப்பிள் நிறுவனம் ரூ.814 கோடி இழப்பீடு தர அமெரிக்க நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் மீது ஆக்சன் என்பவர்  நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.  2019 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.814 கோடி தொகையை செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

மேலும் அக்டோபர் 2019 ஆம் ஆண்டிற்கு முன்பு விதிகளை மீறி பதிவு செய்யப்பட்ட ஆடியோக்களை டெலிட் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த வழக்கில் ரூ.814 கோடி இழப்பீடு தர சம்மதம் தெரிவித்துள்ளபோதும் இறுதி முடிவை நீதிமன்றம் அளிக்கவில்லை. எனவே இந்த வழக்கில் வரும் 14ஆம் தேதி இறுதி முடிவு எட்டப்பட இருக்கிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியானால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்ள ஐபோன்களில் யாரெல்லாம் ஒட்டு கேட்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார்களோ அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

அதிகபட்சமாக ஒரு நபருக்கு 20 அமெரிக்க டாலர்கள் நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ஐபோன்கள் மெதுவாக இயங்கும் வகையில் மென்பொருள் தயாரித்ததாக பதிவான வழக்கிலும் ஆப்பிள் நிறுவனம் பெரும் தொகையை அபராதமாக செலுத்தியது. ஐபோனை பயன்படுத்துவோரின் அனுமதியில்லாமல் பல்வேறு கேடி வேலைகளை செய்து வருகிறது. இதனால் ஐபோன்கள் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி உள்ளதால் அதனை பயன்படுத்துவோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleஎதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான்!! திணறும் ஆப்கானிஸ்தான்.. ஆஹா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!
Next articleநாளை பும்ரா விளையாடுவாரா?? இந்திய வீரர் சொன்ன நச் பதில்.. சோகத்தில் ரசிகர்கள்!!