நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!
கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏதும் சிலகாலமாக திறக்கப்படவில்லை.முதல் அலை இரண்டாம் அலை என கடந்து தற்போது மூன்றாம் அலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இரண்டாம் அலையின் போது அதிக அளவு பாதிப்பினை சந்தித்தோம்.தற்போது இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து காணப்படுவதால் ,தமிழக அரசு பல தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் செயல்பட அனுமதி அளித்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலேயே மாணவர்கள் வருகை புரிந்து பாடங்களும் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
தற்போது 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்புகள் மட்டுமே முதலில் கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்பட்டனர்.அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான எந்தவித அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை.தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரிகளிலும் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்க உள்ளது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களின் முதுநிலைப் படிப்பிற்கான விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர்.இந்த இந்த முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவானது நாளை தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். இதனை விண்ணப்பிப்பதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 58 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும் பதிவு கட்டணம் ரூ 2 என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தற்போது திறக்கப்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் சுழற்ச்சி முறையில் மாணவர்கள் வருகை புரியுமாறு கூறியுள்ளனர்.ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.அவ்வாறு தடுபூசிப் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கென்று தனி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.அதேபோல பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை வைக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளனர்.