இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட் படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய் என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ500 மற்றும் எஸ்சி ,எஸ்டி பிரிவனர் ரூ 250 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும்.இதனை தொடர்ந்து கலந்தாய்வு அக்டோம்பர் 12 ஆம் தேதி தொடங்கி நடைபெறும்.
மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகள் பட்டியலை குறிப்பிட்டுச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை விவரங்களை பற்றி இணையதளத்தில் அறிந்து கொள்ளாலாம்.மேலும் தனியார் கல்லூரிகளில் சேர அவற்றின் இணையதளத்தை அணுக வேண்டும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.