கண் வீக்கத்தை 1 நாளில் குணமாக்க இதனை 2 சொட்டு தடவுங்கள்!!
இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் கண் சார்ந்த பாதிப்புகளில் ஒன்று கண் வீக்கம்.இவை அதிகப்படியான மன அழுத்தம்,தூக்கமின்மை,ஆரோக்கியமற்ற உணவுமுறை,தோல் அலர்ஜி,கண்களில் வெண்படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் கண் வீக்கம் ஏற்படுகிறது.கண்கட்டி,கருவளையம்,கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் போலவே கண் வீக்கமும் அதிக வலி,எரிச்சலை உண்டு பண்ணும்.
பெரும்பாலானோர் முதுமை காலத்தில் கண் வீக்க பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.அதிக நேரம் மின்னனு சாதனங்களை பயன்படுத்துதல்,கண்களுக்கு ஓய்வு கொடுக்காமை,கண் பகுதியில் அடுபடுதல்,கண் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமை,உடல் சூடு போன்ற காரணங்களால் கண் வீக்கம் ஏற்படுகிறது.
கண் வீக்கம் குணமாக எளிய வீட்டு வைத்தியம்:
1)கற்றாழை ஜெல்
பிரஸ் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து கண் சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் வீக்கம குணமாகும்.கற்றாழை ஜெல்லில் இருக்கின்ற ஈரப்பதம் கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
2)பாதாம் எண்ணெய்
கண்களில் வீக்கம் உள்ள இடத்தில் பாதாம் எண்ணையை அப்ளை செய்தால் அவை விரைவில் குணமாகி விடும்.பாதாம் எண்ணெய் கண்களில் இரத்த ஓட்டத்தை தூண்டவும்,தேவையான ஊட்டசத்துக்களை கொடுக்கவும் உதவுகிறது.பாதாமில் இருக்கின்ற ஒமேகா,துத்தநாகம்,வைட்டமின்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.