இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.ஈ., பி.டெக். மற்றும் பி.ஆர்க் போன்ற பட்டப்படிப்புகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவுற்றது.
இந்த பொது தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் மே 7 ஆம் தேதி நீட் தேர்வுகள் நடை பெறுவதால் மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகளை மே 8 ஆம் தேதி தள்ளி வைத்தது.
தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் நிலையில், மே 5 ஆம் தேதியான இன்றே பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகள், அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் மே 5 ஆம் தேதி இன்று முதல் முதல் ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில் சுமார் 1,48,811 இடங்கள் உள்ளன.
http://tneaonline.org மற்றும் http://tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் பொறியியல் சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தமிழகம் முழுவதும் 40 ற்கும் மேற்ப்பட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.