பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சில மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
மேலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேறுவர் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை www.tanuvas.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி தெரிவித்துள்ளது. சம்பள விபரம், கல்லூரி பணியிடம் போன்ற விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி பதிவாளர் கூறியுள்ளார்.