இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!

புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது.

2023-2024  –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும்  மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் 13,182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் புதுச்சேரியில் 56 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.

மேலும் அனைத்து பாடங்களையும் சேர்த்து 791 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஜூன் முப்பதாம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க சமுதாயக் கல்லூரியின் இணையத்திலேயே http://pucc.edu.in விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் படிக்க விரும்புபவர்கள் இந்த இணையத்தள முகவரியில் விண்ணப்பித்து ஜூலை மாதம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம்.

இந்த படிப்புகளுக்கான விவரங்களை சமுதாய கல்லூரியின் இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதில் படித்து பயன்பெற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை விட்டு விடாமல் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.