மகாலட்சுமி தாயாருக்கு உகந்த இந்த திலகத்தை தயார் செய்து நமது வீட்டில் வைத்தாலும், நமது நெற்றியில் வைத்துக் கொண்டாலும் மகாலட்சுமி தாயார் நமது வீட்டில் வந்து குடியேறுவார். ஏனென்றால் இந்த திலகத்திற்கு அவ்வளவு சக்திகள் உண்டு. இந்த திலகத்தை நமது வீடுகளில் தயார் செய்வதன் மூலம் நமது வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடனும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
மேலும் பண பற்றாக்குறை, வறுமை, கடன் தொல்லை ஆகிய அனைத்தும் இந்த திலகத்தின் சக்தியால் நீங்கும். ஏனென்றால் இந்த திலகம் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அவ்வளவு சக்தி வாய்ந்த பொருட்கள். இந்த திலகம் தயார் செய்வதற்கு தேவையான பொருட்களில் ஒன்று ஜாதி பத்திரி.
இந்த ஜாதி பத்திரிக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி அதிகம் உண்டு. இந்த ஜாதி பத்திரி என்பது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களுள் ஒன்று. இந்த திலகம் செய்வதற்கு தேவையான மற்றொரு பொருள் அரகஜா. இந்த அரகஜா என்பது பூஜை பொருட்களுள் மிகவும் முக்கியமான பொருட்களுள் ஒன்று ஆகும்.
இந்த திலகத்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் தயார் செய்து கொள்ளலாம். இதனை தயார் செய்யக்கூடிய நாட்களில் சுத்தபத்தமாகவும், கவுச்சி புலங்காமலும் இருக்க வேண்டும். இதனை தயார் செய்யக்கூடிய நாட்களில் குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்ட பின்னர், இதனை தயார் செய்ய தொடங்க வேண்டும்.
ஜாதிபத்திரி சிறிதளவு, பச்சைக் கற்பூரம் சிறிதளவு, சாதாரண கற்பூரம் ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த தூளை ஒரு அகல் விளக்கில் போட்டு எரிய விட வேண்டும். அது எரிந்து ஆரிய பின்னர் கருப்பு நிற தூளாக மாறி இருக்கும். அதில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக மை போல செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது அதில் சிறிதளவு அரகஜாவை சேர்க்க வேண்டும். தெய்வங்களை ஈர்க்கக் கூடிய சக்தி இந்த அரகஜாவிற்கு உண்டு. எந்த ஒரு கண் திருஷ்டியும் நமது அருகில் வராது. அவ்வளவுதான் இந்த திலகம் தயாராகிவிட்டது. இந்த திலகம் செய்த அடுத்த 48 நாட்களுக்கு அதன் சக்தி இருக்கும். எனவே இதனை 48 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திலகத்தை தீட்டு காலங்களில் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்ற அனைத்து நாட்களிலும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக வெளியில் செல்லும் பொழுது, இதனை நமது நெற்றியில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு ஆபத்தும், கண் திருஷ்டியும் நம்மிடம் நெருங்காது.
இந்த திலகத்தை நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள், வியாபாரம் சிறக்கும், பண வரவு ஏற்படும், மன நிம்மதி ஏற்படும். இந்த திலகத்திற்கு தெய்வங்களை ஈர்க்கக் கூடிய சக்தி என்பது உண்டு. இதனால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.