ஆசனவாயில் அடைத்து உள்ள மலம் வழுக்கி கொண்டு வர.. இந்த கிழங்கில் விளக்கெண்ணெய் தடவி இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

இன்றைய காலத்தில் மலச்சிக்கல் ஒரு பெரும் சிக்கலாக இருக்கிறது.குழந்தைகள்,இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவரும் மலச்சிக்கல் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.மலச்சிக்கல் ஏற்பட மூல காரணம் உண்ணும் உணவுகள் தான்.

உணவு செரிப்பது கடினமானால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கவனிக்கத் தவறினால் நாளடைவில் மூலமாக மாறிவிடும்.ஆகவே முக்கி முக்கி மலம் கழிப்பவர்கள் இனி சிரமமின்றி மலத்தை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை தொடர்ந்து ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு
2)மஞ்சள் தூள்
3)கருப்பு மிளகுத் தூள்
4)விளக்கெண்ணெய்
5)தூள் உப்பு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் இரண்டு அல்லது மூன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் போட்டு தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

2.பிறகு பீலர் கொண்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை மட்டும் சீவி அப்புறப்படுத்துங்கள்.பிறகு சிறிதளவு விளக்கெண்ணெயை சர்க்கரை வள்ளிக்கிழங்கு மீது தடவிக் கொள்ளுங்கள்.

3.அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்க்கு கருப்பு மிளகுத் தூள் தூவி விடுங்கள்.பின்னர் சிறிதளவு மஞ்சள் தூளை சர்க்கரை வள்ளிக்கிழங்கு மீது தடவி விடுங்கள்.

4.அடுத்து சிறிதளவு உப்பை சர்க்கரை வள்ளிக்கிழங்கு மீது தூவிவிடுங்கள்.அதன் பிறகு இட்லி பாத்திரம் ஒன்றை எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

5.பிறகு அதில் இட்லி தட்டு வைத்து சர்க்கரைவள்ளிக் கிழங்கை போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

6.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு மத்து கொண்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கை மசித்து சாப்பிடுங்கள்.இவ்வாறு செய்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

7.அதேபோல் சர்க்கரைவள்ளிக் கிழங்கை காயவைத்து பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் இறுகிய மலம் இளகி வெளியேறிவிடும்.நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் சில நிமிடங்களில் தீர்வு கிடைக்கும்.