ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
183

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்றும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயதான மூத்த குடிமக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதில் 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்றும் ஜனவரி 14ம் தேதி தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும் எனவும் வேட்பு மனு தாக்கலும் அன்றே தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் இதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும். மணிப்பூரில் பிப்ரவரி 27ம் மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Previous articleபொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!
Next articleசேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்