சேற்றுப்புண் குதிகால் கிராக் குணமாக.. இந்த ஹோம்மேட் க்ரீமை அங்கு பூசுங்கள்!!

0
66

நம் இல்லத்தரசிகள் சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மழை மற்றும் பனி காலங்களில் கால்கள் அதிக நேரம் ஈரப்பதத்துடன் இருப்பதால் இந்த சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பு உண்டாகிறது.இதற்கு அதிக செலவு இல்லாத எளிய வீட்டு வைத்தியம் கீழே தரப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:

1)தேங்காய் எண்ணெய்
2)வைட்டமின் ஈ மாத்திரை
3)கிளிசரின்

செய்முறை விளக்கம்:

முதலில் சுத்தமான கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெய் 20 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கிளிசரின் மற்றும் ஒரு தேக்கரண்டி வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இதை கால் விரல்கள் மற்றும் குதிகால் மீது அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதத்தை கழுவி சுத்தம் செய்தால் வெடிப்பு மற்றும் சேற்றுப்புண் பாதிப்பு குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)ரோஜா இதழ்
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை விளக்கம்:

ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழ் பறித்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு ரோஜா இதழ் பொடி போட்டுக் கொள்ளவும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை ரோஜா இதழ் பொடியில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பு மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை
2)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை வெயிலில் போட்டு மொரு மொரு பதத்திற்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு துண்டு மஞ்சள் கிழங்குடன் பவுடர் பதத்திற்கு அரைத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

இந்த மருதாணி பொடியில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து குழைத்து குதிகால் வெடிப்பு மற்றும் சேற்றுப்புண்கள் மீது பூசினால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

Previous articleஷாருக்கான் சாரிடம் இருந்துதான் காப்பியடித்தேன்!! உண்மையை உடைத்து பேசிய ஜெயம் ரவி!!
Next articleதொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!