இந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்! என்ன அது?

Photo of author

By Kowsalya

இந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்! என்ன அது?

உடல் எடையை குறைத்து அழகாக மாறுவது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. உடல் எடையை குறைப்பதற்கு பலர் பலவிதமாக முயற்சித்து வருகின்றனர். இந்த உடல் எடையானது அனைவருக்கும் ஒரு மன அழுத்தத்தையே தருகின்றது.இங்கு நாம் காணப்போகும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது கொழுப்பு கரைவதை உங்கள் கண் கூடாகக் காணலாம். இந்த எண்ணெய் ஆனது மிகவும் இயற்கை முறையானதே. வாருங்கள் எப்படி உடல் எடையை இந்த எண்ணெய் மூலம் குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கடுகு எண்ணெய்

2. கருஞ்சீரகம்

3. பட்டை

4. நீலகிரி மர எண்ணெய்.

5. பிளாஸ்டிக் பேப்பர்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்.

2. பிறகு அதில் ஒரு கப் கடுகு எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து சூடேற்றவும்.

3. அடுத்து அதில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை போடவும் பின் இரண்டு பட்டை துண்டுகளையும் போடவும்.

4. லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆற வைக்கவும்.(blend bubbles).

5. கடைசியில் ஒரு ஸ்பூன் நீலகிரி தைலம் எண்ணெயை ஊற்றவும்.

6. வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும் .நன்றாக அனைத்து எண்ணெயையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

7. கொழுப்புகள் அதிகமாக உள்ளதோ அங்கு இந்த எண்ணையை பூசி ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் நன்கு இறுக்கமாக சுற்றி கொள்ளவும்.

8. ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடவும்.

இந்த எண்ணெயானது உடலில் சென்று தங்கியுள்ள கொழுப்புக்களை  கரைத்து வியர்வை மூலம் வெளியேற்றும்.

ஒரு முறை இதை யூஸ் பண்ணுங்க! உங்க கொழுப்பு கரையறத பாருங்க!