வீங்கிய பாதங்கள் மீது இந்த எண்ணையை தடவினால்.. அடுத்த 5 நிமிடத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

நம் உடல் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர பாதங்கள் உதவுகிறது.இதனால் கால் பாதங்களை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்று.பாதங்களில் சிறு காயங்கள் ஏற்பட்டால் கூட நடப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.அவ்வாறு இருக்கையில் பாத தேய்மானம்.பாத வீக்கம்,வயது முதுமை போன்ற காரணங்களால் பாதங்களில் அதிக வலி ஏற்பட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வயத்தவர்கள் மட்டும் சந்தித்து வந்த பாதவலி தற்பொழுது இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது.கால்கள் வலிமை குறைவதால் சிறிது தூரம் நடந்தாலே பாத வீக்கம்,கால் சிவத்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

நீண்ட கால பாத வலியால் அவதியடைந்து வருபவர்கள் கீழே தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

வீட்டு வைத்தியம் ஒன்று:

1)நல்லெண்ணெய் -நான்கு தேக்கரண்டி
2)பூண்டு பல் – ஒன்று
3)எருக்க இலை – ஒன்று

முதலில் ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு எருக்க இலையை பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் போடவும்.அடுத்து ஒரு பல் வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எண்ணெயை போட்டு சிறிது நேரம் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு கால் பாதங்களில் அப்ளை செய்து வந்தால் வலி குறையும்.

வீட்டு வைத்தியம் இரண்டு:

1)உப்பு தண்ணீர் ஒத்தடம்

ஒரு அகலமான பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கல் உப்பு போட்டு கால் பாதங்களை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.இவ்வாறு தினமும் இரவு செய்து வந்தால் பாத வலியில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

வீட்டு வைத்தியம் மூன்று:

1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)பூண்டு பல் – இரண்டு

முதலில் தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தவும்.பிறகு அதில் இரண்டு பல் பூண்டை தட்டி போட்டு காய்ச்சி லேசான சூட்டில் இருக்கும் பொழுது கால் பாதங்கள் மீது தடவினால் வலி குறையும்.

வீட்டு வைத்தியம் நான்கு:

1)ஆப்பிள் சீடர் வினிகர் ஒத்தடம்

ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் காட்டன் துணியை நினைத்து கால் பாதங்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.