அக்குள் பகுதியில் கொப்பளங்கள் தோன்றினால் கடுமையான வலி மற்றும் எரிச்சல் உண்டாகும்.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதான வைத்தியங்கள் மூலம் சரி செய்துவிடலாம்.
தீர்வு 01:
சுடுநீர்
காட்டன் துண்டு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.தண்ணீர் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிடவும்.
பிறகு ஒரு காட்டன் துண்டை சூடான நீரில் நினைத்து பிழிந்து அக்குள் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.அக்குள் கொப்பளத்தின் மீது ஒத்தடம் வைப்பதால் வீக்கம் வற்றிவிடும்.
தீர்வு 02:
தேங்காய் எண்ணெய்
செய்முறை விளக்கம்:
ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அக்குள் மீது தடவினால் கொப்பளங்கள் காய்ந்துவிடும்.
அதேபோல் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை சூடாக்கி அக்குள் கொப்பளங்கள் மீது அப்ளை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தீர்வு 03:
வைட்டமின் ஈ மாத்திரை
செய்முறை விளக்கம்:
மருந்தகங்களில் கிடைக்கும் வைட்டமின் ஈ மாத்திரையை வாங்கி அக்குள் பகுதியில் உள்ள கொப்பளங்கள் மீது தடவினால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.
தீர்வு 04:
லெமன் சாறு
தண்ணீர்
காட்டன் பஞ்சு
செய்முறை விளக்கம்:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பிறகு இந்த நீரில் காட்டன் பஞ்சு நினைத்து அக்குள் மீது ஒத்தி எடுத்தால் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தீர்வு 05:
ஜாதிக்காய் பொடி
தேன்
தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருகி வந்தால் அக்குள் கொப்பளங்கள் முழுமையாக நீங்கிவிடும்.