தாங்க முடியாத தோல் அரிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

0
409
Apply this oil there to cure unbearable itchy skin!!
Apply this oil there to cure unbearable itchy skin!!

இன்றைய காலகட்டத்தில் சரும பிரச்னைகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர். சரும வெடிப்பு, சரும வறட்சி, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், படர்தமாரை, சொறி சிரங்கு போன்ற சரும பாதிப்புகளின் வரிசையில் தோல் அரிப்பும் பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது.

தோல் தொடர்பான பாதிப்புகளை நாம் பெரிதாக கண்டுகொள்ளாததால் தான் அவை நாளடைவில் தோல் அலர்ஜி நோயாக மாறிவிடுகிறது. எண்ணெய் பசை சருமத்தை விட வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தான் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்டுகிறது.

தோலில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு உண்டதால் போன்ற தொற்று நோய்களுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தோல் அரிப்பு ஏற்பட்டால் அவை அசௌகரிய சூழலை ஏற்படுத்திவிடும்.

இந்த தோல் அரிப்பை போக்க எந்த மாதிரியான வீட்டு வைத்தியங்கள் செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

தோல் அரிப்பை போக்கும் வீட்டு வைத்தியம்:

1)கற்றாழை ஜெல்

பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்து வந்தால் அரிப்பு நீங்கும்.

2)மஞ்சள் தூள் + ஆலிவ் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயிலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் அப்ளை செய்து வந்தால் உரிய தீர்வு கிடைக்கும்.

3)ஆளிவிதை

ஒரு கிண்ணத்தில் 10 கிராம் ஆளிவிதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.

4)மீன் எண்ணெய்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் எண்ணெய் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது. மீன் எண்ணெயை தோல்களுக்கு அப்ளை செய்து வந்தால் அரிப்பு ,வறட்சி நீங்கிவிடும்.

Previous articleஎனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படி நடிக்க மாட்டேன்.. எனக்கு கதை இந்த மாறி இருக்கணும் – நித்யாமேனன்!!
Next articleநீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!