இந்த எண்ணெயை தலைக்கு தடவினால் பொடுகு தொல்லை இனி எப்பொழுதும் இல்லை!!

Photo of author

By Divya

இந்த எண்ணெயை தலைக்கு தடவினால் பொடுகு தொல்லை இனி எப்பொழுதும் இல்லை!!

ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய ஒரு பொடுகு.இவை தலை முடி வறட்சி,முறையாக கூந்தலை பராமரிக்காமல் போதல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை போட்டு காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்ப இலை
2)தேங்காய் எண்ணெய்
3)கருஞ்சீரகம்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை தண்ணீரில் போட்டு அலசி வெயிலில் நன்கு காய வைக்கவும்.

மொருமொருப்பாக காய்ந்து வந்ததும் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்துக் கொள்ளவும்.அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ஊற்றி சூடுபடுத்தவும்.

பின்னர் அரைத்து பொடியாக்கி வைத்துள்ள வேப்பிலை மற்றும் கருஞ்சீரகத்தை அதில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் காய்ச்சவும்.

பிறகு இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டிக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலையில் பொடுகு,அரிப்பு,பேன் தொல்லை முழுமையாக நீங்கும்.