வாரம் 1 முறை இதை தடவுங்கள் ஆயுசுக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனையே இருக்காது!!

Photo of author

By Rupa

வாரம் 1 முறை இதை தடவுங்கள் ஆயுசுக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனையே இருக்காது!!

Rupa

Apply this once a week and you will have no migraine problem for life!!

வாரம் 1 முறை இதை தடவுங்கள் ஆயுசுக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனையே இருக்காது!!

ஒற்றைத் தலைவலியானது ஒரு பக்கம் மட்டும் நமக்கு வலியை ஏற்படுத்தும். ஒற்றை தலைவலி வந்துவிட்டால் வெளிச்சமுள்ள பொருட்களை பார்க்க முடியாது. அது மட்டும் இன்றி வாந்தி குமட்டல் போன்றவையும் ஏற்படும். அதிகப்படியான உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும்.இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் 100 மிலி

குப்பைமேனி இலைச்சாறு 100 மிலி

கஸ்தூரி மஞ்சள் 10 கிராம்

அதிமதுரம் 10 கிராம்

செய்முறை:

வானலில் எடுத்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
இது நடுவே எடுத்து வைத்துள்ள கஸ்தூரி மஞ்சள் மற்றும் அதிமதுரத்தை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
என்னை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தட்டி வைத்துள்ள கஸ்தூரி மஞ்சள் மற்றும் அதிமதுரத்தை சேர்க்க வேண்டும்.
இறுதியில் குப்பைமேனி இலை சாற்றையும் சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக சுண்டி தைல பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இதனை பின்பு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வர ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு காண முடியம்.