உங்கள் தலையில் உள்ள நீண்ட கால வெள்ளை முடிகள்.. நிமிடத்தில் கருமையாக மாற்ற இதை ஒருமுறை தடவுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் தலையில் உள்ள நீண்ட கால வெள்ளை முடிகள்.. நிமிடத்தில் கருமையாக மாற்ற இதை ஒருமுறை தடவுங்கள்!!

உங்கள் தலையில் இருக்கின்ற வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருமையாக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலைகள்
2)சுத்தமான தேங்காய் எண்ணெய்
3)கருஞ்சீரகம்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

2 நிமிடங்களுக்கு பின்னர் கொய்யா இலை சாறு,அரைத்த கருஞ்சீரக பொடி சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் நிறம் மாறி கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி இயற்கையான முறையில் கருமையாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)செம்பருத்தி இலை
3)பெரு நெல்லிக்காய்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் 3 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.2 நிமிடங்களுக்கு பின்னர் செம்பருத்தி இலை சாறு,அரைத்த பெரு நெல்லிக்காய் சாறு ஆகிய இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் நிறம் மாறி கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி இயற்கையான முறையில் கருமையாகும்.