சூட்டு கொப்பளம் இரவோடு இரவாக மறைய இந்த பேஸ்டை 1 முறை தடவுங்கள்!!
கோடை காலத்தில் ஏற்படக் கூடிய ஒரு தோல் நோய் வேனல் கட்டி.இவை உடலில் நீர்ச்சத்து குறைவதால் கட்டிகளாக உருவாகிறது.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் உஷ்ணமாகி கட்டிகள் உருவாகிறது.எனவே தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது.
வேனல் கட்டி அதாவது சூட்டு கொப்பளங்கள் உருவானால் அவை மிகுந்த வலியை உண்டாக்கும்.இந்த கட்டிகளை சிரமமின்றி குணமாக்கும் வழிமுறைகள் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்
ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லில் சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து வேனல் கட்டிகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.
1)எலுமிச்சை சாறு
2)சந்தனம்
ஒரு பழத்தின் சாற்றில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூள் சேர்த்து கலக்கி வேனல் கட்டிகள் மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
1)மஞ்சள் தூள்
2)கல் உப்பு
மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு குழைக்கவும்.இதை வேனல் கட்டிகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
1)கடுகு
2)தேங்காய் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி கடுகை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை 2 தேக்கரண்டி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வேனல் கட்டிகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
1)அரிசி மாவு
2)மஞ்சள் தூள்
ஒரு தேக்கரண்டி அரிசி மாவில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து பேஸ்டாக்கி உடலில் இருக்கின்ற வேனல் கட்டிகள் பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகும்.