கும்பம் – இன்றைய ராசிபலன்!! கவனம் அதிகமாக தேவைப்படும் நாள்!

0
203
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! கவனம் அதிகமாக தேவைப்படும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனம் அதிகமாக தேவைப்படும் நாள். சந்திர பகவான் ராசியில் உள்ளதால் மனதில் குழப்ப நிலை காணப்படும். நிதி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகும்.

கணவன் மனைவி ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையில்லை. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக அலைச்சல்கள் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையில்லை. அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here