கும்பம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

கும்பம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் சந்திராஷ்டமம் தொடர்வதால் சங்கட்டமும் தொடரும் நாள். அமைதியாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து தெளிவாக செயல்பட வேண்டும்.

நிதி வரவு கடினமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பகைமைகளை பாராட்டுவது தவிர்க்க வேண்டும்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மட்டும் வியாபார தொடர்பாக இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் போதுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை இன்றைய நாள் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு விதமான குழப்பம் அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்கள் சற்று இழுபறியாவது என்ற அச்சம் தோன்றலாம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் பிரச்சனைகள் எழலாம். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.