கும்பம் – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

0
273
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் திடீர் பயணத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleசர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here