கும்ப ராசி – இன்றைய ராசிபலன்! தைரியம் அதிகரிக்கும் நாள்!

0
181
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்ப ராசி – இன்றைய ராசிபலன்! தைரியம் அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும். நிதி அற்புதமாக உள்ளது.

 

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தைரியத்தோடு செயல்படுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleமகர ராசி – இன்றைய ராசிபலன்! ஆதயாம் உண்டாகும் நாள்!!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here