கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நாள்!!

0
206
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்களுக்கு திடீர் பிரயாணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோசமான செய்தி கிடைத்த மகிழ்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani