கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

Photo of author

By Selvarani

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்க எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் இடமாற்றம் செய்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையும் செய்து வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆற்றல் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய எண்ணங்கள்  அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கையம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..