கும்பம்-இன்றைய ராசிபலன்! வெற்றி கிட்டும் நாள்!

Photo of author

By CineDesk

கும்பம்-இன்றைய ராசிபலன்! வெற்றி கிட்டும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவதால் அதிகப்படியான மேன்மை கிடைக்கும். நிதி அருமையாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை மிக அருமையாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த அனுகூலத்துடன் காணப்படுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவன் விட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுபவமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். அரசியல்வாதிகள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.