நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

0
122

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் சிவகாசி பகுதியில் அமைந்திருக்கின்ற வேலாயுதம் உளரணியில் நுண்ணிய உர மையம் அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதன்காரணமாக, வேலாயுதம் உளரணியில் முற்றிலுமாக இயற்க்கை அழியக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற அவர், இதுகுறித்து முன்னரே வழக்கு தொடரப்பட்டு எட்டு வாரங்களுக்குள் சிவகாசி நகராட்சி தன்னுடைய மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம் என்று கூறியிருக்கின்றார். ஆனாலும் என்னுடைய மனு மீது போதுமான விசாரணை நடத்தப்படாமல் மறுபடியும் வேலாயுத உளரணியில் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே வேலாயுதம் உளரணியில் நுண்ணிய உர மையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் கண்களை கட்டிக்கொண்டு இருக்காது என்று நீதிபதிகள் மிகக் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள் பழங்கால நீர்நிலைகளை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை நீர் நிலைகளுக்கும், இயற்கைக்கும், அறங்காவலராக மாநிலங்கள் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மழைக்காலங்களில் நுண்ணிய உர மையம் காரணமாக, நீர் நிலைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படகூடாது. அதற்கேற்றவாறு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.