cinema: ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பியாதியினர் பிரிவிற்கு காரணம் தனுஷ் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகன் என அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமானின் மனைவி நேற்று மாலை ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இந்த பதிவில் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியினர் பிரிய போவதாக அறிவிக்கையை வெளியிட்டது. இந்த செய்தி இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது பதிவில் தங்களது தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இவர்களுக்கு 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த பிரிவு விவகாரம் தனுஷை தொற்றிக்கொண்டுள்ளது.
இதற்கு முன் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இதுபோன்ற விவாகரத்து செய்துள்ளார். அதில் முதலில் தனுஷ்- ஐஸ்வர்யா தொடங்கிய இந்த விவகாரம் தொடர்ந்து ஜி வி பிரகாஷ்-சைந்தவி , இமான்-மோனிகா, ஜெயம் ரவி-ஆர்த்தி இவர்களை தொடர்ந்து தற்போது ஏ ஆர் ரகுமான்-சாய்ரா பானு தற்போது தங்களது பிரிவை அறிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரத்திற்கு காரணம் தனுஷ்தான் என்று சமூக வலைதளங்களில் பெரிது பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் தனுஷ் படத்தில் வேலை செய்த ஜி வி பிரகாஷ்-சைந்தவி தம்பதி மற்றும் ஏ எல் விஜய் மற்றும் அமலாபால் ,ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிகளின் பிரிவில் தனுஷ் பெயர் மிகவும் பேசப்பட்டது. தற்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதனால் தற்போது நெட்டிசன்கள் இதற்கும் தனுஷ் தான் காரணம் என்று கருத்து பகிர்ந்து வருகின்றனர்.