ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!!
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். இவர் இளம் வயதிலேயே தந்தைய இழந்ததால் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகைத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்தும் இசையமைத்தும் வருகிறார்.
ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினாறு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கிபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயிடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடம் பணியாற்றினார். இசைத்துறையினால் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தனம் இயக்கத்தில் “ரோஜா திரைப்படம் தான் இசைதுறையில் அறிமுகம் ஆனா முதல் படம் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மை அது இல்லையாம். அதற்கு முன்பே அமிரஜன் இயக்கிய ‘’வணக்கம் வாத்தியாரே’’ என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொடுத்து இருக்கிறாராம். தன்னுடைய முதல் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மான் முத்திரைப் பதித்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் பணம் இல்லை என கூறி, இளையராஜாவிடம் கீபோர்ட் வாசித்து கொண்டிருந்த ரஹ்மானிடம் இசையமைத்து கொடுக்கும்படி கேட்ருக்கிறார்.
அவரும் ஒரே நாளில் படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம். இந்த படம் இவருக்கு வாழ்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது. படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமில்லாமல் முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித் தந்தது.
ரகுமானை தமிழர்கள் மட்டுமில்ல மொத்த இந்தியாவும் “யார் இந்த இளைஞன்?” என்று கேட்க வைத்தது. 2003 ஆம் ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் திரைபடத்திற்கும், தேசிய விருதுகள் கிடைத்தது. ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக “தேசிய விருது மற்றும் “பிலிம்பேர்” விருதும் ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருதும் மற்றும் பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது மற்றும் பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.