அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

0
78

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியியும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக அரசு விவசாயிகளை இமை காப்பது போல் காத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தின் தான் அதிகபட்சமாக பயிர் காப்பீடுதிட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் தான் கடன் தள்ளுபடி குறித்து வெளியிடுவார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளது.

ஆரணி அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த போது: அதிமுக ஆட்சியில் ஒரு அதிகாரியை கூட மிரட்டியது கிடையாது. அரசு அதிகாரத்தில் இல்லாமலேயே, உதயநிதி, டிஜிபியையே மிரட்டுகிறார். ஆட்சியை இவர்கள் கையில் கொடுத்தால் நாடு தாங்குமா?. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் திருவண்ணாமலையை பிரித்து, ஆரணியை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

நான் ஊர்ந்து போய் முதல்வரானேன் என்கிறார் ஸ்டாலின். நான் நடந்து போய் தான், அதிமுக பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவால் முதல்வரானேன். திமுகவில் அண்ணா மறைவிற்குப் பிறகு நெடுஞ்செழியன் தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் அவரை குறுக்கு வழியில் ஏமாற்றில் கருணாநிதி முதலமைச்சரானார் என திமுகவையும் கிழித்து தொங்கவிட்டார்.