அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!

Photo of author

By Vijay

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!

Vijay

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அரண்மனை-3 திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி உள்ளார்.

இந்நிலையில் அரண்மனை-3 திரைப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.