முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான அறப்போர் இயக்கத்தினரின் புகார்களின் அடிப்படையில் சென்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி அவரைக் குறிவைத்து 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை செய்தார்கள். அதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரான கே சி வீரமணி மீது அடுத்தகட்ட புகாரை தெரிவித்திருக்கிறது. இந்த அரப்போர் இயக்கம் முன்னாள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கின்றார் என்று ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும், குற்றம்சாட்டி இருக்கிறார்கள் அறப்போரை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.
இது தொடர்பாக இன்றைய தினம் அரப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினார் அவர் பேசும்போது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தன்னுடைய உறவினர்களின் பெயரில் சொத்துகளை வாங்கி தன்னுடைய பெயரில் பினாமியாக வைத்திருக்கிறார் பாலா சொத்துக்களை வாங்கி ஒரு சில மாதங்களில் ஒரு சில வருடங்களில் ஏன் ஒரே நாளில் கூட தன் பெயருக்கு மாற்றி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார்.
சென்னை சாந்தோமில் ஒரு வீடு அவருடைய தாயார் பெயரில் வாங்கப்பட்டு அதே நாளிலேயே அவருடைய பெயரில் அதற்கான ரொக்கம் கைமாறி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். பத்திரப்பதிவு துறை அமைச்சர் ஆகவே இருந்துகொண்டு பத்திரப்பதிவு நெறிமுறைகளை அவர் மீறி இருக்கின்றார் .வழிகாட்டு மதிப்பை விட குறைவான மதிப்பை செலுத்தி வாங்கியதன் மூலமாக அரசுக்கு பத்திரம் மூலமாக வருவாய் இழப்பு உண்டாகி இருக்கிறது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அவருடைய தாயார் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து 6s எடுக்கேஷனல் சரிடபில டிரஸ்ட் என வைத்திருக்கிறார்கள். இதற்கு 36 ஏக்கர் நிலம் இருக்கிறது. 99 ஏக்கர் நிலம் அவருடைய மாமனார் பழனி 2015ஆம் ஆண்டில் என்பது லட்சத்திற்கு வாங்கி அதே வருடத்தில் இந்த அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்திருக்கிறார். அந்த நில பத்திரங்களை வைத்து 15 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஹோட்டல் ஹில்ஸ் ஓசூர் என்ற மிகப்பெரிய சொகுசு விடுதி ஓசூர் பகுதியில் சிப்காட் இன் நிலத்திலும் அவருடைய நிலத்திலும் ஒன்றாக சேர்த்துக் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் வீரமணியின் நிறுவனத்தின் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது. சிப்காட் 4 ஆயிரம் சதுர அடி நிலத்தை 99 வருடங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் லீசுக்கு முன்னாள் அமைச்சரின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 35 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதன் மீது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டப்பட்டு இருக்கிறது. அது எவ்வாறு நிகழ்ந்தது. சிப்காட் நிலம் ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் லீஸ் என கொடுக்கப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என்று தெரிவித்திருக்கின்றார்.
ஏலகிரி மலையில் 9 ஏக்கர் நிலம் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இருக்கிறது இதை சப்ரிஜிஸ்ட்ர் எதிர்த்து இருக்கின்றார். இருந்தாலும் அந்தத் துறையின் அமைச்சரான வீரமணியால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2011 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் பொது ஊழியராகவும், சட்டசபை உறுப்பினராகவும் மற்றும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துகளை சேர்த்திருக்கிறார். இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட மதிப்பீடு சந்தை விலையுடன் மதிப்பீடு செய்யப்பட்டால் இது இன்னும் பல மடங்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பாக புகார் வழங்க இருக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். வருமானத்தை மீறி சொத்துக்கள் சேர்த்தது மட்டுமல்லாமல் தன்னுடைய அமைச்சர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவர் சொத்து சேர்ப்பதற்காக மக்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் என கூறி இருக்கின்றார் ஜெயராம் வெங்கடேசன்.