சிலிண்டர் விலை உயர்வு! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்!

0
71

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் சமயத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் அதோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பது வழக்கம். அதனடிப்படையில் சென்ற பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரையில் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் அளவில் 610 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்ற பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் 710 ஆக உயர்ந்தது. அடுத்த மாதத்தில் தொடர்ச்சியாக சிலிண்டர் விலை அதிகரித்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதற்கு நடுவில் சிலிண்டர் விலை 835 இலிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 விற்பனையானது அடுத்த மூன்று மாதங்களாக எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் இந்நிலையில், ஜூன் மாத ஆரம்பத்தில் 25 ரூபாய் அதிகரித்து 50 50 ரூபாய்க்கு விற்பனையானது..

சுமார் ஒன்றரை மாதங்கள் சென்ற நிலையில் தற்சமயம் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை 175 ரூபாய் 50 காசு ஆக அதிகரித்திருக்கிறது. சிலிண்டர் விலை 875 .50 அத்துடன் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான ஐம்பது ரூபாய் என்று மொத்தமாக 925 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிலிண்டருக்கான மானியம் கொடுக்கப்படுவதில்லை. இந்த சமயத்தில் சிலிண்டர் விலை அதிகரித்திருக்கிறது இது இல்லத்தரசிகள் இடையே மிகப் பெரிய கவலையை உண்டாக்கியது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

சென்ற 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலிண்டரின் விலை உயர்வால் கவலை அடைந்து இருக்கிறார்கள்.