ABC ஜூஸ் மற்றும் மால்ட் உடலுக்கு நல்லதா? கெட்டதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

Photo of author

By Divya

ABC ஜூஸ் மற்றும் மால்ட் உடலுக்கு நல்லதா? கெட்டதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

Divya

மூன்று காய்களை கொண்டு ABC ஜூஸ்,மால்ட் தயாரிக்கப்படுகிறது.அந்த மூன்று காய்கள் ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்தான்.இவை மூன்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.தற்பொழுது டீ,காபிக்கு பதில் இந்த ABC ஜூஸ் மற்றும் ABC மால்ட் தயாரித்து குடிக்கின்றனர்.கேரட்,பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி பருகுகின்றனர்.

ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தால் ABC ஜூஸ் கிடைக்கும்.அதுவே இந்த மூன்று காய்களையும் மைய்ய அரைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து உலர்த்தி பொடித்தால் ABC மால்ட் பவுடர் கிடைக்கும்.

ABC ஜூஸ் மற்றும் மால்டில் மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,ஜிங்க்,வைட்டமின்கள்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மூன்று காய்களை கொண்டு ஜூஸ் அல்லது மால்ட் செய்து பருகுவதால்உடலுக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்திகிடைக்கும்.

சருமப் பொலிவு அதிகரிக்க,என்றும் இளமையாக இருக்க ABC மால்ட் செய்து குடிக்கலாம்.வெயில் காலத்தில் சரும பாதிப்புகள் அண்டாமல் இருக்க ABC ஜூஸ் செய்து குடிக்கலாம்.தொடர்ந்து ABC ஜூஸ்,மால்ட் குடித்து வந்தால் உடல் நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.இரத்த ஓட்டம் அதிகரிக்க,இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேற இந்த ஜூஸ் குடிக்கலாம்.

இரத்த சோகை குணமாக,இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ABC ஜூஸ் செய்து குடிக்கலாம்.முடி உதிர்வை தடுக்க இந்த ஜூஸ் உதவுகிறது.இருப்பினும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

குழந்தைகளுக்கு ABC மால்ட் அதிகமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் அலர்ஜி ஏற்படலாம்.ABC மால்டில் இருக்கின்ற சர்க்கரை நீரிழிவு நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.இந்த ஜூஸை அளவிற்கு அதிகமாக பருகினால் கிட்னியில் கல் உருவாகிவிடும்.குடல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.எனவே பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ABC ஜூஸ்,மால்ட்டை குறைவான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.