அடிக்கடி கணுக்கால் வீங்கி விடுகிறதா? இதை சரி செய்ய இந்த பெஸ்ட் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

அடிக்கடி கணுக்கால் வீங்கி விடுகிறதா? இதை சரி செய்ய இந்த பெஸ்ட் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள திரவம் கணுக்காலில் அதிகளவு சேரும் பொழுது அந்த பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.இதை தான் கணுக்கால் வீக்கம் என்று சொல்கின்றோம்.இந்த கணுக்கால் வீக்கம் யாருக்கு வேண்டுமாலும் ஏற்படலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி கணுக்கால் வீக்கம் ஏற்படும்.இதனால் நடக்கும் போது அதிக வலி ஏற்படும்.சிலருக்கு மூச்சு திணறல்,நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணுக்கால் வீக்கம் முழுமையாக குறைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

*கல் உப்பு

வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து கணுக்காலை சுத்தம் செய்வதன் மூலம் வீக்கம் குறையும்.

*ஐஸ் பேக்

கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஐஸ் பேக் மசாஜ் கொடுத்தால் அங்கு தேங்கிய திரவம் கரைந்து வலி குறைய வாய்ப்பு இருக்கிறது.

*எலுமிச்சை ஜூஸ்

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கணுக்கால் பகுதியில் தேங்கியிருக்கும் திரவம் நீங்கிவிடும்.

*மசாஜ்

தினமும் இரவு தூங்குவதற்கு முன் கால்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் கணுக்கால் பகுதியில் திரவம் சேர்வது தடுக்கப்படும்.

*தண்ணீர்

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதினால் கணுக்கால் பகுதியில் திரவம் சேர்வது தடுக்கப்படும்.

*கொத்தமல்லி விதை

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் கணுக்கால் வீக்கம் குறையும்.

*வெள்ளரி மற்றும் தர்பூசணி சாறு

தினமும் ஒரு கிளாஸ் வெள்ளரி சாறு அல்லது தர்பூசணி சாறு அருந்தி வந்தால் கணுக்கால் வீக்கம் முழுமையாக குறையும்.