இன்றைய காலத்தில் அதிகமானோர் சந்திக்கும் பெரிய நோய் பாதிப்பாக இதய நோய் உள்ளது.சீரற்ற இதயத் துடிப்பால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பல உள்ளன.இதில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இதய செயலிழப்பு ஆகிய இரண்டும் ஒன்று தான் என்றும் பலரும் நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த இரண்டு பாதிப்புகள் வெவ்வேறானது.கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு நின்றுவிடும்.அதன் பிறகு இரத்த ஓட்டம் முழுவதும் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படும்.மூளையின் செயல்பாடு மட்டும் அதிகபட்சம் 5 நிமிடங்களுக்கு இருக்கும்.
நமது இதயத்தை இயக்குவது இரத்த ஓட்டம் தான்.அப்படி இருக்கையில் இந்த இரத்த ஓட்டத்தின் இயக்கம் தடைபடும் பொழுது அதாவது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது.
இதனால் இதயத் துடிப்பு மொத்தமாக நின்றுவிடும்.இதன் காரணமாக உடலில் உள்ள ஒட்டுமொத்த உறுப்புகளும் செயலிழந்துவிடும்.இந்த கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும்.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1)தமனி அடைப்பு
2)சீரற்ற இதயத் துடிப்பு
3)உயர் இரத்த அழுத்தம்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் சில அறிகுறிகள் தென்படும்.படபடப்பு,பதற்றம்,மூச்சுத் திணறல்,வியர்த்தல் போன்றவை மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.இதய செயலிழப்பு ஏற்பட்டவர்கள் ஒருசில நிமிடங்களில் உரிய முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டால் உயிர் பிழைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.நெஞ்சுபகுதியில் CPR சிகிச்சை செய்தால் உயிர்பிழைக்க வாய்ப்புகள் அதிகம்.
ஹார்ட் அட்டாக் வர காரணங்கள்:
**கொழுப்பு உணவுகள்
**இரத்த அழுத்தம் அதிகரித்தல்
**மது மற்றும் புகைப்பழக்கம்
**சோம்பேறி வாழ்க்கைமுறை
**உடற்பயிற்சி இன்மை
இதுபோன்ற காரணங்களால் மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது.மாரடைப்பிற்கான அறிகுகளை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்:
1)கழுத்து வலி
2)இடது தோள் பட்டை வலி
3)மூச்சுத் திணறல்
4)வாந்தி
5)அதிகம் வியர்த்தல்
6)தொண்டை இறுக்கம்
கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பு பிரச்சனை ஏற்பட்டால் உரிய முதலுதவி செய்து பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்க உதவ வேண்டும்.