குழந்தைகளுக்கு கொசு கடி தொல்லையா!! இனி ஆல் அவுட் தேவையில்லை இதை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

குழந்தைகளுக்கு கொசு கடி தொல்லையா!! இனி ஆல் அவுட் தேவையில்லை இதை செய்யுங்கள்!!

தற்பொழுது மழைகாலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொசுப்புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகி டெங்கு,சிக்கன் குனியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்புகிறது.

நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுவதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.இதனால் சிறு குழந்தையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.இதற்கு உங்கள் வீட்டில் கொசுக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கொசுக்களை விரட்டியடிக்க உதவும் டிப்ஸ்:

1)பூண்டு
2)புதினா

ஒரு பல் பூண்டு மற்றும் 10 புதினா இலைகளை அரைத்து பேஸ்டாக்கி நீரில் கலந்து ஸ்ப்ரே செய்தால் வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.

1)புதினா எண்ணெய்

150 மில்லி தண்ணீரில் 1/4 தேக்கரண்டி புதினா எண்ணெய் சேர்த்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு நடமாட்டம் குறையும்.

1)துளசி

சிறிதளவு துளசியை அரைத்து நீரில் கலந்து வீடு முழுவதும் தெளிப்பதன் மூலம் கொசு பரவலை கட்டுப்படுத்த முடியும்.

1)எலுமிச்சை சாறு
2)யூகலிப்டஸ் ஆயில்

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி யூகலிப்டஸ் ஆயிலை ஒரு கிளாஸ் நீரில் கலந்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.

1)வேப்ப எண்ணெய்

ஒரு கிளாஸ் நீரில் 1/4 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் மிக்ஸ் செய்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.

1)தேங்காய் எண்ணெய்
2) வேப்ப எண்ணெய்

இந்த இரண்டு எண்ணையும் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் கொசுக்கள் நடமாடுவது கட்டுப்படும்.

1)லாவெண்டர் எண்ணெய்
2)தேயிலை மர எண்ணெய்

இவ்விரு எண்ணையையும் ஒரு தேக்கரண்டி தேக்கரண்டி அளவு 250 மில்லி நீரில் கலந்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் நடமாடுவது கட்டுப்படும்.