மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Photo of author

By Rupa

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர்.

அதனால் மக்கள் தினசரி வாழ்வாதாரத்தை வாழவே பெரும் சிரமப்பட்டனர்.முதலில் தொற்றானது கொரோனாவாக காணப்பட்டது.அதனையடுத்து இரண்டாம் அலையின் போது டெல்டா வகை கொரோனாவாக உருமாறியது.அதனையடுத்து தற்பொழுது தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரானாக உருமாறி காணப்படுகிறது.அதுமட்டுமின்றி இந்த தொற்று கொரோனா வைரஸிடமிருந்து அதிகளவு உருமாற்றம் அடைந்திருந்தாலும் டெல்டா வகை கொரோனாவை விட குறைந்தளவு பாதிப்பை தரக்கூடியது என்று கூறியுள்ளனர்.ஆனால் கொரோனா வைரஸை காட்டிலும் அதி வேகம் பரவும் தன்மை கொண்டது என கூறியுள்ளனர்.

தற்போது அடுத்தபடியாக ஒமைக்ரான் வைரஸை அடுத்து டெல்மைக்ரான் என்ற வைரஸ் பரவி வருவதாக கூறியுள்ளனர்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு டெல்மைக்ரான் வகை கொரோனா பரவி வருவதாக கூறுகின்றனர்.இந்த டெல்மைக்ரான் தொற்று பற்று கொரோனா பற்றி ஆராயிச்சி செய்யும் மகாராஷ்டிரா சேர்ந்த சிறப்பு குழு மருத்துவர் ஷஷாங் கூறுகையில்,இது கொரோனா மற்றும் டெல்டா வகை இரண்டையும் சேர்ந்தது தான் இந்த டெல்மைக்ரான் வகை கொரோனா தொற்று.

இது கொரோனா தொற்றை காட்டிலும் ஒமைக்ரான் தொற்றை காட்டிலும் அதி வேகத்தில் பரவக்கூடியது என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த தொற்று பரவலானது இந்த அமெரிக்க மட்றும் ஐரோப்பிய நாடுகளில் சுனாமி போல பறவை வருகிறது என்றும் அவர் கூறினார்.வரும் 2022 ஆம் ஆண்டு  இந்த தொற்று நம் இந்தியாவில் பரவ வாய்புள்ளது என்பது போல கூறினார்.அந்தவகையில் வரும் 2022 ஆம் ஆண்டு தொடங்கும் போதே வரும் இந்த செய்தியால் மக்கள் நிலை தடுமாறி காணப்படுகின்றனர்.